மத்திய வங்கியின் வசமுள்ள முக்கிய பொறுப்புக்களை திரைசேரி வசமாக்க நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் வசமுள்ள பல முக்கிய பொறுப்புகளை திரைசேரியின்வசம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி இடம்பெற்றதன் பின்னர் ஏற்பட்ட நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த புதிய மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விசேடமாக அரசாங்கம் கடனை செலுத்துவதற்காக பணத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers