சீன பிரதமரின் இலங்கை விஜயம் பிற்போகிறது

Report Print Ajith Ajith in அரசியல்

சீன பிரதமர் லி கெகியாங் இந்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன பிரதமர் இந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும், இந்தப் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்தரமுல்லயில் காணி வங்கியை திறந்து வைப்பது, சீன பிரதமர் லி கெகியாங்கின் இலங்கை பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

குறித்த காணி வங்கி இலங்கை நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில், அமையவுள்ளது.

எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்கு இந்தக் காணி வங்கி, உதவியாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers