கூட்டமைப்பு தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றது! சி.வி.விக்னேஸ்வரன்

Report Print Murali Murali in அரசியல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தமிழர் அரசியலின் மாற்றுத்தலைமையொன்று எதிர்பார்க்கப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதற்குக் கூட்டமைப்பைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் தமது தவறை உணரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கூட்டமைப்பிலிருந்து தம்மை விலகச் செய்து, அதன் மூலம் தான் கூட்டமைப்பைப் பிளவுபடச் செய்துவிட்டதாகப் பிரசாரம் செய்வதற்குக் கூட்டமைப்பு தருணம் பார்த்திருக்கின்றது.

மக்கள் புதிய கட்சியொன்றை உருவாக்குவதையே எதிர்பார்க்கின்றார்கள். எனினும், இருக்கும் மக்கள் இயக்கத்தைப் பலப்படுத்தி முன்செல்லவே நான் விரும்புகின்றேன்.

உட்கட்சிப் பேச்சுக்கள் பற்றி எனக்குத்தெரியாது. அவை எனக்குத் தெரியப்படுத்தப்படுவதும் இல்லை. அவர்களாக என்னை வெளியேற்றினால் கூட்டமைப்பை நானே உடைத்ததாக மக்கள் முன்னிலையில் கூறமுடியாமல் போய்விடும்.

இதேவேளை, வட மாகாணபையின் அமைச்சர் டெனீஸ்வரனின் பதவி நீக்கம் செல்லுபடியற்றது என்ற நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரான நடவடிக்கையை ஆளுநரே மேற்கொண்டிருக்க வேண்டும்.

சட்டப்படி நியமிக்கப்பட்டு உறுதிமொழி கொடுத்த வடமாகாண அமைச்சர்கள் ஐவரும் தமது கடமைகளைச்செய்து கொண்டு போகின்றார்கள்.

அந்த ஐவரில் ஒருவரின் இடத்தை டெனீஸ்வரனுக்கு ஆளுநர் ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அவரால் கடமையாற்ற முடியும். அவ்வாறு இதுவரையில் ஆளுநர் ஒருவரையும் பதவி நீக்கம் செய்யவுமில்லை.

டெனீஸ்வரன் அமைச்சர் கடமைகள் எவற்றிலும் ஈடுபடவுமில்லை. ஆளுநர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அவர் எடுக்காததை மறந்து என்னை நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மன்றில் நிறுத்தியுள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers