மக்கள் மீது மேலும் வரிச்சுமை?

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு வரிகள் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் மக்கள் மீது மேலும் வரிச்சுமை திணிக்கப்பட உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரி விதிப்பது குறித்த உத்தேச வரைவுத் திட்டம், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போது புதிய காபன் வரி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பத்தாயிரம் ரூபாவிற்கு அதிகமான வங்கிக் கொடுக்கல் வாங்கல்களின் போது அரசாங்க கடன் மீளச் செலுத்துகை தொடர்பான வரி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதி சொகுசு வாகனங்களுக்கான சொகுசு வாகன வரி மற்றும் தொலைதொடர்பு கோபுரங்கள் மீதான வரி என்பனவும் அறவீடு செய்யப்பட உள்ளன.

இந்த வரிகளை அறவீடு செய்வது குறித்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றி அதன் அடிப்படையில் வரி விதித்தல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...