சிவனொளிபாத மலையின் பெயர் பலகையில் ஏற்பட்ட சர்ச்சை! அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை

Report Print Shalini in அரசியல்

சிவனொளிபாத மலையில் சர்ச்சையை ஏற்படுத்திய பெயர் பலகை தொடர்பில் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

குறித்த பெயர் பலகை மாற்றப்பட்டமை தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் அமைச்சர் அறிக்கை கோரியுள்ளார்.

அத்துடன், குறித்த இடத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் இருந்ததை போன்றே பெயர் பலகையை வைக்குமாறும் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பணித்துள்ளார்.

இதேவேளை, சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் “சிவனடிபாதம்” எனப் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டு, “கௌதம புத்தபகவானின் ஸ்ரீ பாதஸ்தானம்” என பொறிக்கப்பட்ட கல்வெட்டு புதிதாக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...