தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பிரதமருடன் பேசவுள்ளேன்: சுமந்திரன் எம்.பி

Report Print Rakesh in அரசியல்

“குறுகியகால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்” என்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சு நடத்துவேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற சிறைச்சாலை கைதிகளுடனான சந்திப்பின் பின்னர் இன்று காலை கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.

இன்று அல்லது நாளை இந்த சந்திப்பு இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாம் ஒன்பது வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கருத்தில் கொண்டு, குறுகியகால புனர்வாழ்வையாவது வழங்கி விடுவிக்குமாறு கோரியே அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் பிரதமருடன் இன்று அல்லது நாளை தெரியப்படுத்துவேன். அவர்கள் 9 ஆண்டு காலம் தடுத்து வைக்கப்பட்டதையும் கவனத்தில் எடுத்து குறுகியகால புனர்வாழ்வுடன் விடுதலை செய்வது தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்படும்" என தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனும் சென்றுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளான, ம.சுலக்ஷன், இ.திருவருள், சூ.ஜெயச்சந்திரன், இரா.தபோரூபன், சி.தில்லைராஜ், இ.ஜெகன், சி.சிவசீலன் மற்றும் த.நிமலன் ஆகியோரே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...