இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு ஒரு காவலன்: செல்வம் அடைக்கலநாதன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

இலங்கை தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போது தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும், ஆதரவும் தர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் கண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தமிழ்நாடு ஒரு காவலன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உலக ரீதியான ஒரு ஆதரவையும் வழங்குகின்றது.

நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்காக என்று சொல்லுகின்றார்கள். இதனால் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்றோம்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். விட்டுசென்ற பணிகளை மறைந்த அம்மையார் ஜெயலலிதா எமக்கு தொடர்ந்தும் பணிகளை செய்து வந்தார்கள். அவர் வழியில் இன்னும் எமக்கு பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது என்றார்.