இலங்கையில் மக்கள் சிந்துகின்ற கண்ணீர் துடைக்கப்படும்! இந்திய அமைச்சர் உறுதி

Report Print Thirumal Thirumal in அரசியல்

இலங்கைக்கும், இந்தியாவிற்கும், தமிழ் மக்களிற்கும் ஒரு உறவு பாலமாக தமிழக அரசு என்றும் இருக்கும் என தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் நேற்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“என்றும் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும். இங்கு மக்கள் சிந்துகின்ற கண்ணீர் துடைக்கப்படும். மக்களுடைய நலன் காக்கப்படும்.

இலங்கையும் இந்தியாவும் ஒரு சகோதர பாசத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு என்றும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என நான் உறுதியளிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.