எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் என்றோ தீர்வு கிடைத்திருக்கும்: இராஜாங்க அமைச்சர்

Report Print Thirumal Thirumal in அரசியல்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இன்று உயிரோடு இருந்திருந்தால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீடிக்கின்ற சில முரண்பாடுகளுக்கு என்றோ தீர்வு காணப்பட்டிருக்கும் என தாம் நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

எம்.ஜி. இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் கண்டியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும், தெரிவிக்கையில்,

இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு எவ்விதமான தயக்கமும் இல்லாமல் அவர் உதவி செய்துள்ளார். இலங்கை மக்களை என் மக்கள் என உரிமையோடு அழைப்பார்.

எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த நடிகர், அரசியல்வாதி, நல்ல மனிதன் ஆவார். அது மட்டுமல்லாமல் அவர் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்ட மனிதன் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏழைகளுக்கு அவர் உதவி செய்தவர். அவர் ஏழை மக்களை என்றும் கைவிட்டதில்லை என மேலும் தெரிவித்தார்.