வடமாகாணத்தில் 134 பேர் அரச ஊழியர்களாக நியமனம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

வடமாகாண பொதுச்சேவையின் கீழ் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 134 பேருக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றுள்ளதுடன் 134 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 42 சாரதிகளுக்கும் 73 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் 19 பேருக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Latest Offers

loading...