நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Report Print Murali Murali in அரசியல்

அரச பணியாளர்களின் செயற்திறனுக்கு முன்னுதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தருவது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

அபிவிருத்தியை நோக்காக கொண்டு பயணிக்கும் நாட்டிற்கு வினைத்திறனான முன்னுதாரணமாக நாடாளுமன்றமே திகழ வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் பதினைந்தரை இலட்சம் அரச பணியாளர்கள் இருக்கின்றனர். எனினும், அரச பணியாளர்களின் செயற்திறன் 30க்கும் 35க்கும் இடையிலான சதவீதத்திலேயே இருக்கின்றன.

அரச பணியாளர்களின் செயற்திறனுக்கு முன்னுதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவது முக்கியமானதாகவும்.

வாத விவாதத்தில் பங்குகொள்வது மாத்திரம் அல்ல நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பல்வேறு கலந்துரையாடல்களில் அவர்கள் பங்குகொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தராமையானது நாட்டில் அபிவிருத்திக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.