தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும்!

Report Print Murali Murali in அரசியல்

கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகளை தடுத்து வைத்திருப்பது பொருத்தமான ஒன்றல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகளை தடுத்து வைத்திருப்பது பொருத்தமான ஒன்றல்ல.

யுத்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களை சமூக மயப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியதன் பின்னர் இந்தப் பிரச்சினை குறித்து மீண்டும் பேச வேண்டியதில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers