தொலைபேசி அழைப்பை எடுக்காத தூதுவரை பதவி நீக்கினாரா மைத்திரி?

Report Print Murali Murali in அரசியல்

தனது தொலைபேசி அழைப்பை எடுக்காத ஆஸ்திரியாவுக்கான இலங்கை தூதுவர் உள்ளிட்ட பிற தூதுவர்களை நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியன்னா தூதுவரிடம் பேச விரும்பியதாகவும், எனினும், நான்கரை மணி நேரமாக தூதரக அலுவலகத்தை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த வாரம் நான் தூதரிடம் பேச விரும்பினேன். இதற்காக நான்கரை மணி நேரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆறு தொலைப்பேசிகளிலும் மணி அடித்தன.

எனினும், யாரும் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. இது ஆஸ்திரியாவுக்கான தூதரகம் மட்டுமல்ல. மேலும் நான்கைந்து நாடுகளுக்குமான தூதரகமும் உள்ளன.

நான்கரை மணி நேரமாக தொலைபேசி அழைப்பை எடுக்க யாரும் இல்லை. இந்த ஒரு தூதரகத்துக்கு மட்டுமல்ல, மேலும் பிற தூதரகத்துக்கும் செய்தி அனுப்ப நான் விரும்பினேன்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தொலைபேசி அழைப்பை எடுக்காமையின் காரணமாக தூதுவர்கள் திருப்பி அழைப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கு வெளிவிவகார அமைச்சு மறுப்பு வெளியிட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களும் திருப்பி அனுப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி தவறானது.

தூதுவர் மற்றும் பிற தூதுவர்கள் மாத்திரம் பணியை முடித்துகொண்டு நாடு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Latest Offers

loading...