ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நாளை கூடுகின்றது அமைச்சரவை!

Report Print Rakesh in அரசியல்

நல்லாட்சிஅரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பதற்கு முன்னர் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் இது என்பதால் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

ஐ.நாவில் முன்வைக்கப்படவுள்ள புதிய யோசனை குறித்து இதன்போது ஜனாதிபதி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத் தொடரில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் கடந்த செவ்வாயன்று நடந்து முடிந்த நிலையில், மறுபடியும் வியாழனன்று விசேட அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...