மைத்திரி மற்றும் கோத்தபாயவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள தீர்மானம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரிடம் எதிர்வரும் நாட்களில் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக தெரியவருகிறது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு வாக்கு மூலங்களைப் பெற்றக்கொள்ள உள்ளது.

ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தவிர, பொலிஸ் திணைக்களத்தின் சில சிரேஸ்ட அதிகாரிகளிடமும் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.

இந்த கொலை சதி முயற்சி பற்றிய விபரங்களை வெளியிட்ட நாமல் குமாரவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எம்.ஆர்.லத்தீப், நந்தன முனசிங்க, நிலந்த ஜயவர்தன, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ், பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜனகாந்த ஆகியோரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, செல்லிடப்பேசி தொடர்பாடல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி உரையாடலுடன் தொடர்புடைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் குரலும் தொலைபேசி உரையாடலில் காணப்படும் குரலும் ஒன்றா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.