இலங்கையிடம் இந்தியா விடுத்துள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் கடற்பரப்புக்குள் செல்லும் இந்திய மீனவர்களை மனிதாபிமான ரீதியில் நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா கோரியுள்ளது.

சென்னை மேல்நீதிமன்றத்தில் நேற்று இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்திய மீனவர்களை கைது செய்யும் போதும் பின் விளக்கமறியலில் வைக்கும் போதும் மனிதநேயத்துடன் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை தாம் கேட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மீனவர் சங்கம் ஒன்று தாக்கல் செய்த மனு ஒன்றுக்கு பதில் மனுவை சமர்ப்பித்தபோதே இந்திய மத்திய அரசாங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.