இலங்கை - தமிழகத்திற்கு இடையில் உறவை கட்டியெழுப்ப நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

பல தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை கட்டியெழுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் முதல் தடவையாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழு தமிழகம் செல்லவுள்ளதாக இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டியில் கடந்த வார இறுதியில் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

இந்த நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம், கரு ஜெயசூரிய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.