யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள தமிழ் நாட்டு அமைச்சர்

Report Print Sumi in அரசியல்

இந்திய, தமிழ் நாட்டு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ். பொதுநூலகத்திற்காக தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் 50 ஆயிரம் புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர், கல்வி அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர் ஆகியோரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் யாழிற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது யாழ். பொதுநூலகத்திற்கு வந்த கே.ஏ.செங்கோட்டையன் பொதுநூலக விருந்தினர் ஏட்டில் கையொப்பமிட்ட பின்னர் பொதுநூலக கேட்போர் கூடத்தில் புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.