வெலிகடை சிறைக் கைதிகள் கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு நீதவான் கொடுத்த உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்

வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்ஜீவ ஆகியோர் எதிர்வரும் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியகனே முன்னலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.