ஜனாதிபதிக்கு இதனைச் சொல்லுங்கள் - முன்னாள் அதிகாரி ஒருவர் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது நிலையை எடுத்துரைக்குமாறு பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் உயர் அதிகாரி நியோமல் ரங்கஜீவ தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் படுகொலைச் சம்பவம் தொடர்பில் ரங்கஜீவ மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட போது ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

“ போதைப் பொருள் கடத்தலில் ஈடுட்டவர்கள் பிடித்து, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நான் தற்பொழுது கூட்டில் இருக்கின்றேன் என ஜனாதிபியிடம் சொல்லவும்”

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலை ஆணையாளர் எமில்ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோரின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 2ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.