மகிந்தவின் இந்திய விஜயம் குறித்து விமல் வெளியிட்ட கருத்து

Report Print Steephen Steephen in அரசியல்

இந்தியா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கழுத்தில் மாலையை அணிவித்தால் பிரச்சினையில்லை எனவும், ஆனால் இந்தியா, நாட்டின் கழுத்தில் மாலை அணிவிப்பதற்கு இணங்க போவதில்லை எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் நேர்நிலையான பின்னர், ஊடகங்கள், முன்னாள் ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது இந்திய விஜயத்தின் போது நாமல் ராஜபக்ச இலங்கையின் எதிர்கால தலைவர் என காட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் மத்தியில் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாசுதேவ நாணயக்கார, குமார வெல்கம ஆகியோர் மகிந்த ராஜபக்சவின் கருத்து சம்பந்தமான வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளதுடன் விமல் வீரவங்ச, சந்திம வீரக்கொடி, தினேஷ் குணவர்தன உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், ராஜபக்சவினர் நடந்து கொள்ளும் விதம் தொடர்பில் எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.