தமிழக அமைச்சர் தலைமையிலான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு விஜயம்

Report Print Steephen Steephen in அரசியல்

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உட்பட தமிழக தூதுக்குழுவினர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பின் பேரில் இன்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரை சந்தித்த தமிழக பிரதிநிதிகளுக்கு சபாநாயகர் நினைவு பரிசையும் வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பில் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் சைதா துரைசாமி, எம்.ஜி.ஆர் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் ஏ.சி சண்முகன், தமிழக வர்த்தகர்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

மேலும் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம் ஆகியோரும் தமிழக பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.