அரசாங்கத்திற்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான உடன்படிக்கை ஊர்ஜிதம் - பிரசன்ன ரணதுங்க

Report Print Steephen Steephen in அரசியல்

இராணுவத்தின் 33 படையணிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தகவல் மூலம் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இரகசியமான உடன்படிக்கை இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் முழுமையான புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தப்படாமல் விடுதலை செய்யப்பட்டதன் காரணமாவே ஆவா குழு என்ற குழு வடக்கில் உருவாகியதாக குற்றம் சுமத்திய பொன்சேகா, அதே குற்றச்சாட்டை அரசாங்கத்திற்கு இருந்து கொண்டு சுமத்தும் போது தலைவர்கள் அமைதியாக இருந்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வருவதற்காக வெள்ளை வான் என்ற கதையை கட்டவிழ்த்து விட்டவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் பாதாள உலகக்குழுவினருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக பொலிஸார் செய்வதறியாது இருக்கின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச பாதாள உலகக்குழுக்களை அடக்கிய போது நாட்டில் இருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்களை தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களே மீண்டும் நாட்டுக்கு வரவழைத்தனர். அது ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் வரை சென்றுள்ளது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.