ஜனாதிபதியை கொலை செய்ய சதி நடவடிக்கை! பின்னணியில் அர்ஜூன் மகேந்திரன்?

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி கொலை சதி முயற்சியின் பின்னால், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உண்மையைத் தேடும் ஆய்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி பிரேமநாத் சீ.தொலவத்த இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கொலை சதி முயற்சியின் பின்னால், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்தரன் இருக்கின்றாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், ஜனாதிபதிக்கு அடுத்ததாக தலைமைப் பதவிக்கு வர இருப்பவர் பிரதமர் ஆவார்.

பிரதமரைத் தலைவராக கொண்டுவர வேண்டிய தேவை அர்ஜுன் மஹேந்திரனுக்கு இருப்பதாக கருதுவதற்கு போதியளவு இடம்பாடு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டயதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவில் பொறுப்பாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.