சரத் வீரசேகர தலைமையில் இன்றிரவு ஜெனிவா செல்கின்றது மஹிந்த அணி!

Report Print Rakesh in அரசியல்

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வார இறுதியில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவொன்று இன்றிரவு அங்கு செல்லவுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை முற்றுமுழுதாக விடுவிக்குமாறு இம்முறை ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இதையடுத்து முடிந்தால் ஜனாதிபதி தாம் கூறியமைக்கிணங்க ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிக் காட்டட்டும் என்று சரத் வீரசேகர சவால் விடுத்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

எதிர்வரும் 25ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.