கொலைச் சதி குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு கோத்தபாய கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

கொலைச் சதி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கோத்தபாய ராஜபக்ச நேற்று குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டிலேயே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச, சட்டத்தரணிகளின் ஊடாக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

குற்ற விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ செனவிரட்னவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடிதம் ஊடாக கிடைக்கப் பெற்ற இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக குற்ற விசாரணைப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த கொலைச் சதி தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவை சேர்ந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.