கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மட்டக்களப்பு மாநகரசபை மேயர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் ஸ்ரீபவன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று மட்டக்களப்பில் உள்ள ஆளுநரின் விடுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் சிறந்த அரச அதிகாரிகளை கொண்ட நிர்வாக சேவைகளில் மக்கள் பயன் பெற வேண்டும் என்பன தொடர்பில் ஆளுநர், மாநகரசபை மேயருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேலும் முன்னேற்றமடைய செய்வதற்கான புதிய திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் மணிவண்ணனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.