உலகம் முழுவதும் வலுவான நிலையில் டொலர்! பிரதமர் வெளியிட்டுள்ள விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

உலகம் முழுவதும் அமெரிக்க டொலர் வலுவான நிலையில் இருப்பதுடன் ஏனைய சகல நாணயங்களும் பெறுமதி இழந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

உலகம் முழுவதும் அமெரிக்க டொலர் வலுவாக இருப்பதுடன், ஏனைய நாணயங்கள் பெறுமதி இழந்துள்ளன. இந்தியாவுக்கு போல் இலங்கைக்கும் இந்த நிலைமை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

எதிர்க்கட்சியினருக்கு தேவையெனில் இது சம்பந்தமாக விவாதம் ஒன்றை நடத்தலாம். அதேபோல் இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்பதை ஆராய்வது அவசியமானது.

எரிபொருள் விற்பனை செய்வதால் கிடைக்கும் இலாபத்தை பாருங்கள். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது, நாட்டிலும் அதிகரிக்கும் என நாங்கள் முன்னரே கூறியிருந்தோம்.

உலக சந்தையில் விலை குறைந்தால், அதன் பலன் மக்களுக்கு வழங்கப்படும். இதுவரை காலமும் அந்த பலனை மக்களுக்கு வழங்கி வந்தோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers