முன்னாள் ஜனாதிபதியின் தலைமை அதிகாரிக்கு எதிரான வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழியர்களின் தலைமை அதிகாரி காமினி செனரத் உட்பட 4 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை அடுத்த மாதம் 29ஆம் திகதி முதல் தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

லிற்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி காமினி செனரத் உட்பட 4 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.