ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் - விசாரணைகள் ஒரு வாரத்திற்குள் நிறைவு

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதித்திட்ட தொடர்பான முறைப்பாடு சம்பந்தமான விசாரணைகள் ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்யப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளரின் பாதுகாப்பு சம்பந்தமாக தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும் முழு நாடும் அவரை பாதுகாக்கும்.

அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை குற்றச்சாட்டை எதிர்நோக்கும் பொலிஸ் அதிகாரி ஏற்கவேண்டும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.