நல்லாட்சி அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கும் நிதியினை குறைக்காது

Report Print Steephen Steephen in அரசியல்

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக பல நாடுகள் செலவுகளை குறைத்துள்ள போதிலும் நல்லாட்சி அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்தும் பேசிய பிரதமர்,

உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பல நாடுகள், இலவசங்கள், மானியங்கள் மற்றும் பொதுத்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைத்து வருகின்றன.

எனினும் எமது அரசாங்கம் இலவச கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை எந்த வகையிலும் குறைக்காது. சிறந்த இலவச கல்வி மற்றும் சுகாதாரத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

கல்வித்துறையில் மட்டுமல்லாது இலவச மருத்துவத்துறையிலும் முன்னேற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை வருடாந்தம் அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers