காணாமல் போனோர் செயலகம் வழங்கிய பரிந்துரைகளை ஆராய அமைச்சரவை உப குழு

Report Print Steephen Steephen in அரசியல்

காணாமல் போனோர் தொடர்பான செயலகம் வழங்கிய பரிந்துரைகளை ஆராய்ந்து, செயற்படுத்துவதற்கு பொருத்தமான யோசனைகளை முன்வைக்க அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

10 பேரை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைச்சரவை உப குழுவின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உப குழு முன்வைக்கும் யோசனைகளை அமுல்படுத்துவதற்காக தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.