டெனீஸ்வரனுக்குச் சார்பான இடைக்கால உத்தரவு ஒக்டோபர் 17ஆம் திகதி வரை நீடிப்பு!

Report Print Rakesh in அரசியல்

வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் பா.டெனீஸ்வரன் நீடிக்கிறார் எனத் தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே விடுத்திருந்த இடைக்கால உத்தரவு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

இது தொடர்பான டெனீஸ்வரனின் மூல வழக்கு அடுத்த மாதம் 8ஆம் திகதி எடுக்கப்படுவதாக முன்னர் திகதியிடப்பட்டிருந்தது. அதன் காரணமாக அந்த இடைக்கால உத்தரவும் அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இவ்விடயத்தை ஒட்டிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டு பூர்வாங்கப் பரிசீலனையின் பின்னர் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தப் பின்புலத்தில் மூல வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீள நீதிமன்றத்தில் எடுக்கப்பட மாட்டாது என்ற நிலையில் மேற்படி இடைக்கால உத்தரவை அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு வழங்கியது.