ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் தீவிர கரிசனை!

Report Print Aasim in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தும் என்று அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஶ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று பொது அபேட்சகராக களமிறங்கியபோது அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டது. அவர் குறித்த கரிசனை கொள்ள எவருமே இருக்கவில்லை.

அன்று மைத்திரியின் பாதுகாப்பு குறித்து அலட்சியம் காட்டியவர்களே இன்று கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளனர். அவ்வாறானவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குறித்து இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஆனால் இன்று ஜனாதிபதியை தலைவராகக் கொண்ட அரசாங்கம் ஒன்று பதவியில் உள்ளது. அதன் காரணமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கரிசனையும் தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.

எனவே ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அநாவசியமாக பதற்றமடைய வேண்டியதில்லை. அரசாங்கம் அதனைப் பார்த்துக் கொள்ளும்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்த எந்தவொரு விடயத்திலும் அரசாங்கம் அசட்டையாக இருக்க மாட்டாது. எனவே கூட்டு எதிர்க்கட்சியினர் வீணாக பதற்றம் கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் அஜித் மான்னப்பெரும தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Latest Offers