பொலிஸ் மா அதிபர் குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

பொலிஸ் மா அதிபரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமாயின் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் என்பவர் முக்கியமான பாத்திரம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் மற்றும் குற்றச்சாட்டை சுமத்துபவர்களிடமும் விசாரணைகளை நடத்த வேண்டும்.

குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது என்பதற்காக எவரையும் பதவியில் இருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் மட்டும் போதாது அது நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers