முன்னாள் ஜனாதிபதியின் கோட்டையிலிருந்து விரட்டப்பட்ட சந்திரிக்கா!

Report Print Vethu Vethu in அரசியல்

அபிவிருத்தி திட்டம் ஒன்றை திறக்க சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளனர்.

அத்தனகலவில் பாலம் ஒன்றை திறக்க சென்ற சந்திரிக்கா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊ கூச்சலிட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்காவின் கோட்டையாக கருதப்படுகின்ற அத்தனகல பகுதியில், அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்தனகல ஓய ஊடாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை திறப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி உட்பட குழுவினர் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த பாலம் கடந்த அரசாங்கத்தின் திட்டம் எனவும், அதனை தற்போதைய அரசாங்கத்தினர் திறப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேல் மாகாண சபை உறுப்பினர் திறந்து வைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பாலத்தை திறக்க சென்ற குழுவினருக்கு எதிராக பொது மக்கள் ஊ கூச்சிட்டுள்ளனர்.

Latest Offers