மைத்திரி நாடு திரும்பியதும் முக்கிய உயர் பதவிகளில் அதிரடி மாற்றங்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐ.நா பொதுச் சபையின் 73ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க நிவ்யோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின் முக்கிய உயர் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பதவி வகித்த ரவிநாத் ஆரியசிங்க, வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நிலையில், தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவி வகிக்கும், பிரசாத் காரியவசம் வொஷிங்டனுக்கான இலங்கை தூதுவராக செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்காக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவின் பெயர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது பிரதம நீதியரசராக பதவி வகிக்கும் ப்ரியசாத் டெப் அடுத்த மாதம் அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இவர் அந்தப் பதவியை பொறுப்பேற்க உள்ளார்.

தற்போதை பிரதி சொலிசிஸ்ட ஜெனரலாக பதவி வகிக்கும் தப்புல டி லிவேரா புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட உள்ளதாகவும் அறியமுடிகின்றது.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோக விசாரணை ஆணைக்குழுவிற்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers