நாமல் குமாரவின் வீட்டுக்கு வந்து சென்ற இந்தியப் பிரஜை யார்?

Report Print Manju in அரசியல்

அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு நாடு பூராகவும் பேசப்பட்ட லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாமல் குமாரவின் வீட்டுக்கு இந்தியப் பிரஜையொருவர் வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல சந்தர்ப்பங்களில் குறித்த இந்தியப் பிரஜை தன்னை சந்திப்பதற்காக வந்துள்ளதாகவும் அது தொடர்பாக சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக நாமல் குமார கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த இந்தியப் பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாமல் குமாரவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் கைது செய்யப்பட்ட குறித்த இந்தியப் பிரஜை தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவிக்கையில்,

நாமல் குமார கூறுவதுபோல் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக புலனாய்வுப் பிரிவு எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் தொடர்பாக எமது அதிகாரிகள் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

அதிக பாதுகாப்பு தேவை என்று அவர் நினைத்தால், அதை நாம் வழங்க முடியும். இதேவேளை, இந்திய பிரஜை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

ஜனாதிபதியையும், கோத்தபாயவையும், மாகந்துரே மதுஷ் என்பவரைக் கொண்டு, படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, நாமல் குமார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers