மைத்திரியின் ஐ.நா உரைக்கு எதிராக நியூயோர்க்கில் நடத்தப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற வரும் இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, நியூயோர்க்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தை எதிர்வரும் செவ்வாய் கிழமை(25) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புமாறு ஐ.நா பொதுச்சபை உறுப்பினர்களையும், அனைத்துலக ஊடகங்களையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபைக்கு முன்னால் மைத்திரி திரும்பிப் போ #GoBackMY3# எனும் முழக்கத்துடன் இடம்பெறவுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்தும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கெடுப்பதற்கான பேருந்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers