புதிய அரசியலமைப்பு உத்தேச நகல் வரைபு 25இல்: தமிழ் மொழியாக்கம் அடுத்த மாதம்

Report Print Ajith Ajith in அரசியல்

புதிய அரசியலமைப்புக்கான உத்தேச நகல் வரைபு எதிர்வரும் 25ஆம் திகதி அரசியல் அமைப்பு சபையில் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுக்கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்பு வரைபின் சிங்கள மொழியாக்கம் கடந்த 21ஆம் திகதி அரசியலமைப்பு சபையிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதன் தமிழ் மொழியாக்கம் அடுத்த மாதம் 11ஆம் திகதி அரசியல் அமைப்பு சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers