நாங்களும் இந்த நாட்டு பிரஜைகளே! இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

நாங்கள் எதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் அதற்காக போராட்டம் செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலையில் இன்று காலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமயங்களும் ஒன்றாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

ஆனால் எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிலை அவ்வாறு இல்லை. நாங்கள் எதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் அதற்காக போராட்டம் செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது.

இது அடிமைகளாக இருக்கின்றவர்களின் நிலை போலவே இருக்கின்றது. ஏனையவர்கள் சம்பள போராட்டம் செய்யும் போது அதற்காக குரல் கொடுக்கும் அனைவரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில்லை.

இதற்கு காரணம் என்ன? நாங்களும் இந்த நாட்டு பிரஜைகளே. இந்த நாட்டின் அபிவிருத்தி முதல் ஆட்சிக்கான அரசாங்கங்களை கொண்டு வருவது வரை எங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றோம்.

ஆனால் எங்களுக்கு என்று பிரச்சினைகள் வரும் பொழுது நாங்கள் ஓரம்கட்டப்படுகின்றோம். எனவே இந்த நிலையில் மாற்றம் வேண்டும். நாங்கள் 2 வருடத்திற்கு ஒருமுறை எங்களுடைய ஊதிய உயர்விற்காக போராட்டம் செய்ய முடியாது.

ஏனையவர்களுக்கு என்ன நடைமுறை இருக்கின்றதோ அது போன்று ஒரு நடைமுறையை எங்களுக்கும் அறிமுகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers