பதில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ராமேஸ்வரனுக்கு தலவாக்கலையில் அமோக வரவேற்பு

Report Print Thirumal Thirumal in அரசியல்

மத்திய மாகாணத்தின் பதில் முதலமைச்சராக கடமையேற்றுள்ள, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு தலவாக்கலை பிரதேசத்தில் இன்றைய தினம் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்கா சென்றுள்ளதன் காரணமாக மருதபாண்டி ராமேஸ்வரன் பதில் முதல் அமைச்சராக நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் பதில் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக இன்று இரவு தலவாக்கலை நகரில் பொதுமக்கள் பட்டாசு கொழுத்தி அமோக வரவேற்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers