மைத்திரி மற்றும் கோத்தா மீதான கொலை முயற்சி? இரு துப்பாக்கிகள் மீட்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சதி தொடர்பில் இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றவியல் விசாரணைப் பிரிவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்த இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளும் ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ஆகியோரின் கொலை சூழ்ச்சிக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டதா என்ற கோணத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரின் பணிகளுக்கு, இலகு இயந்திரத் துப்பாக்கிகள் தேவையில்லை என்கின்ற நிலையிலதற்காக குறித்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன என சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers