அரசியலமைப்புச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Report Print Aasim in அரசியல்

அரசியலமைப்புச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் ஐவர் நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் தற்போதைக்கு முடிவடைந்துள்ளதன் காரணமாக எதிர்வரும் வாரத்திற்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களாக இதுவரை காலமும் உத்தியோக ரீதியில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் டப்.டீ.ஜோன் செனவிரத்ன, திலக் மாரப்பன, விஜித ஹேரத், சிப்லி அசீஸ் மற்றும் ராதிகா குமாரஸ்வாமி ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.

இவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தவிர ஏனையோருக்கு மீண்டும் அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களாக தெரிவாகும் வாய்ப்பு இல்லை. அதன் காரணமாகவே புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers