வாகன இறக்குமதி தொடர்பில் மக்களை ஏமாற்றும் அரசாங்கம்

Report Print Kamel Kamel in அரசியல்

வாகன இறக்குமதி குறித்த அரசாங்கத்தின் தீர்மானம் மக்களை ஏமாற்றும் நோக்கிலானது என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புஞ்சி பொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்கள் இறக்குமதி செய்து பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பதில் பயன் ஏதும் கிடைக்கப் போவதில்லை.

வாகன இறக்குமதி இடைநிறுத்தம் பற்றிய அரசாங்கத்தின் அறிவிப்பானது மக்களை ஏமாற்றும் வகையிலானது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் கடன் தொகை உயர்வடையாது என மத்திய வங்கி ஆளுனர் கூறுகின்றார்.

எனினும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் வெளிநாட்டு கடன் தொகை உயர்வடையாது என உஅவர் குறிப்பிட்டுள்ளார்.