மைத்திரியை கொலை செய்ய சதி! நாலக சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவின் பிரதிப் பெலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் அலுவலகம் சட்டரீதியாக மூடப்பட்டுள்ளது

அவருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாகவே. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன

இந்தநிலையில் அவருடைய பயன்பாட்டில் இருந்த இரண்டு மடிக்கணணிகள் விசாரணைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஊழல்களுக்கு எதிரான செயலணியின் பணிப்பாளர் நாமல் குமாரவின் முறைப்பாட்டின் கீழ் நாலக டி சில்வா, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறியே நாலக டி சில்வாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாலக சில்வாவும், நாமல் குமாரவும் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவுகள் ஏற்கனவே இரசாயனப்பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers