மூன்று மாகாண சபைகளுக்கான கால எல்லை இந்த மாதத்துடன் நிறைவு

Report Print Mubarak in அரசியல்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கான கால எல்லை இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

வட மேல் மாகாண சபை ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதியும் மத்திய மாகாண சபை ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியும் வடக்கு மாகாண சபை ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதியும் கலைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செலயகம் அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த மூன்று மாகாண சபைகளும் ஆளுநர் வசமாகின்றன.

இந்த மூன்று மாகாண சபைகளில் ஆயுட்காலம் நிறைவடைந்ததன் பின்னர் மொத்தமாக 6 மாகாண சபைகளுக்காக ஆயுட்காலங்கள் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளில் ஆயுட்காலம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்திருந்தன.

இதேவேளை எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் காணப்படுகின்ற குளறுபடிகளினால் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளது.

எவ்வாறாயினும் மாகாண சபை எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு இரண்டு மாத காலம் தேவைப்படுவதுடன் அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல் கண்காணிப்பகங்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers