ஜனாதிபதி, கோத்தபாயவை கொலை செய்ய திட்டமிட்டது யார்? விசாரணையில் அம்பலமான உண்மை

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு தொடர்பு உண்டு என்பது உறுதியாகியுள்ளது.

படுகொலை சதித் திட்டம் தொடர்பில் தம்முடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொலைபேசியில் உரையாடினார் என ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பில் அவர் தொலைபேசி உரையாடல்களை பதிவுகளையும் சமர்ப்பித்திருந்தார்.

இந்த உரையாடல்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்புபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் இந்த விசாரணைகளை நடத்தியிருந்தது.

இந்த விசாரணையின் போது தொலைபேசி உரையாடலில் உள்ள குரல், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் குரலே என்பது உறுதியாகியுள்ளது என வார இறுதி ஊடகமொன்று அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் இந்த வாரத்தில் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்க உள்ளது.

அதன் பின்னர் இந்த விடயம் குறித்து நீதிமன்றில் அறிக்கையிடப்பட உள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers