கடந்தாண்டில் 5100 கோடி ரூபா வருமான வரியை இழந்த அரசாங்கம்

Report Print Kamel Kamel in அரசியல்

கடந்த ஆண்டில் அரசாங்கத்திற்கு 5100 கோடி ரூபா வருமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் 5100 கோடி ரூபா பணம் கடந்த நிதியாண்டில் கிடைக்கப் பெறவில்லை.

வரிகளை உரிய முறையில் செலுத்தாமை மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிர்வாகக் குறைபாடுகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மதிப்பீட்டின் அடிப்படையில் வரி செலுத்தாமை, உண்மையான வருமானத்தை வெளிக்காட்டமை போன்ற காரணிகளுக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விதித்த வரி மற்றும் தண்டப் பணங்களும் திரட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு இறைவரிச் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் இவ்வாறு வருமான இழப்பு ஏற்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தினால் தற்பொழுது கிடைக்கப் பெறும் 5.5 வீத வருமானம் 18 வீதமாக உயர்வடையும் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Latest Offers