பலாலி விமான நிலையம், திருகோணமலை குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்கள், பலாலி விமான நிலையம் என்பன இலங்கையிடம் இருந்து கைவிட்டுபோகும் நிலை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், மேலும் தெரிவிக்கையில்,

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலைகள் என எமது ஆட்சிக் காலத்தில் பல்வேறு வளங்கள் நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டன.

எனினும், அவை அனைத்தும் தற்போது விற்பனை செய்யப்படும் நிலையில் உள்ளன. இதனால் அவை இலங்கையிடமிருந்து கைவிட்டு போகும் நிலைமை உள்ளதென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Latest Offers